பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரத்தில் பாஜக பெண் நிர்வாகி சரண்யா என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பட்டுக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த பெண் பற்றிய விவரங்களை சேகரித்தனர்.
தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் சரண்யா என்பதும், அவர் மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக மகளிரணி பொறுப்பாளர் என்பதும் தெரியவந்தது. திருமணம் முடிந்து தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் வசித்து வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இப்படியான சூழலில், சரண்யா தலை துண்டித்து கொலை செய்யப்படும் அளவுக்கு அங்கு என்ன நடந்தது? முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? கொலை செய்த கும்பல் யார் என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். தலை துண்டிக்கப்பட்டு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.