விமானத்தில் தோனிக்கு கிஃப்ட் கொடுத்த பணிப்பெண்…வைரலாகும் அசத்தல் வீடியோ.!!

dhoni fan gift

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனும்,முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான தோனிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அங்கு சென்றாலும், அவரை தல என அழைப்பதற்கு ஒரு கூட்டமே இருக்கிறது என்றே கூறலாம். அந்த அளவிற்கு பலருடைய மனதை கிரிககெட் விளையாட்டின் மூலமும், தன்னுடைய நல்ல குணத்தின் மூலமும் கவர்ந்துள்ளார்.

இந்நிலையில், தோனியிடம் பலரும் ஆட்டோகிராப் வாங்கிவிட்டு அவருக்கு பரிசு கொடுக்கும் பல வீடியோக்களை நீங்கள் பார்த்திருக்கலாம். அந்த வகையில், தற்போது விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, விமானத்தில் பணிப்பெண் ஒருவர்  பல சாக்லைட்டுகளை கிஃப்டாக கொடுத்துள்ளார்.இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

MSDhoni
MSDhoni [Image Source : Twitter/@CricSuperFan]

வீடியோவில் ” அந்த விமான பணிப்பெண் தோனிக்கு நிறைய சாக்லேட்டுகளை கொண்டு சென்று கொடுக்கிறார். அதற்கு தோனி நன்றி கூறிவிட்டு ஒரே ஒரு சாக்லேட்டை எடுத்துவிட்டு மீதி சாக்லேட்டுகளை திரும்பி கொடுக்கிறார்” தோனி செய்த இந்த நெகிழ்ச்சி செயல் குறித்து பலரும் தங்களுடைய சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.


மேலும் , 3 ஐசிசி கிரிக்கெட்  போட்டி கோப்பைகளை வென்ற இந்திய அணியை வழிநடத்திய ஒரே கேப்டன் தோனி மட்டுமே. சமீபத்தில், இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2023 பட்டத்தை வென்றதற்கும் அவர் தான் கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்