சுதீப் தியாகி (33) இந்திய அணிக்காக நான்கு ஒருநாள் போட்டிகளிலும், ஒரு சர்வேதேச டி20 போட்டிகளிலும், ஐபிஎல் தொடரில்14 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஹைதராபாத் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
சுதீப் தியாகிக்கு வாய்ப்புகள் கிடைக்காததால் தனது ஓய்வை அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது.
எனது கனவுக்கு விடைபெறுவதற்கு நான் எடுத்த மிக கடினமான முடிவு இது. கிரிக்கெட் உலகிற்கு குட் பை எனப் பதிவிட்டுள்ளார். தோனி தலைமையில் விளையாடியது மகிழ்ச்சியான தருணம். மேலும், சுரேஷ் ரெய்னாவுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
unknown node