#T20 WorldCup 2022: தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக பாகிஸ்தான் அதிரடி ரன் குவிப்பு.!

டி-20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி அதிரடியாக 185 ரன்கள் குவிப்பு.

டி-20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி அதிரடியாக 185 ரன்கள் குவிப்பு.

ஆஸ்திரேலியாவில் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் சிட்னியில் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாக். அணியில் ரிஸ்வான்(4), பாபர் அசாம்(6) ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அதன் பின் களமிறங்கிய மொஹம்மது ஹாரிஸ் ஓரளவு நின்று ஆடி 28 ரன்கள் குவித்தார். 43 ரன்னுக்கு 4 விக்கெட்கள் என்ற நிலையில் இப்திகார் அகமது(51), ஷதாப் கான்(52), மற்றும் முகமது நவாஸ்(28) ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்களில்பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா சார்பில் அன்ரிச் நார்ட்ஜே 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.

#T20 WorldCup 2022: தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக பாகிஸ்தான் அதிரடி ரன் குவிப்பு.!