இங்கிலாந்தை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அசத்தல்.!
இங்கிலாந்துக்கு எதிரான 5வது சர்வதேச டி20 போட்டியில் 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி அசத்தியுள்ளது.

மும்பை : கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மிக பெரிய சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.
இதில், 5 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி தொடரை வென்றது இந்திய அணி. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்று பவுலிங் செய்ய முடிவு செய்திருக்கிறார் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர்.
இதனால், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி,20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 247 ரன்கள் குவித்தது. பவுலிங்கிலும் அசத்தி இங்கிலாந்து அணியை 100 ரன்களுக்குள்(97) சுருட்டியது.
இங்கிலாந்து அணிக்காக, பில் சால்ட் 23 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார், ஆனால் மற்ற எந்த பேட்ஸ்மேனும் பெரியதாக விளையாடவில்லை. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி, ஷிவம் துபே, அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 10.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இழந்து 97 ரன்களில் சுருண்டது. இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா நல்ல தொடக்கம் கொடுத்தார். சஞ்சு சாம்சன் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அசத்தினார்.
ஆனால், 16 ரன்களில் அவுட் ஆனார். இதற்குப் பிறகு, அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா ஆகியோர் நல்ல பார்ட்னர் ஷிப் போட்டு ஆடினர். இரண்டாவது விக்கெட்டுக்கு இருவரும் 43 பந்துகளில் 115 ரன்கள் சேர்த்தனர். இந்தப் போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா ஒன் மேன் ஷோவை வெளிப்படுத்தி 54 பந்துகளில் 135 ரன்கள் குவித்தார். அவர் ஏழு பவுண்டரிகள் மற்றும் 13 சிக்ஸர்கள் வந்தன.
இவர்களைத் தவிர, சூர்யகுமார் யாதவ் 2 ரன்களும், ஷிவம் துபே 30 ரன்களும், ஹர்திக் பாண்டியா 9 ரன்களும், ரிங்கு சிங் 9 ரன்களும், அக்சர் பட்டேல் 15 ரன்களும் எடுத்தனர். இறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4க்கு 1 என்ற கணக்கில் கோப்பையை வென்றது இந்திய அணி.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி கொள்கை விவகாரம் முதல்…டெல்லி நிலநடுக்கம் வரை!
February 17, 2025
பயனர்களுக்கு தூண்டில் போட்ட அம்பானி! ஜியோ ஹாட்ஸ்டார் திட்டங்கள் என்னென்ன தெரியுமா?
February 17, 2025
சோலி முடிஞ்சு.. ரிஷப் பண்ட்டை பதம் பார்த்த ஹர்திக் பாண்டியா பந்து.!
February 17, 2025
மஜாபா..மஜாபா! ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம்! மதராஸி குட்டி டீசர் இதோ!
February 17, 2025
டெல்லியைத் தொடர்ந்து பீகாரிலும் மிதமான நிலநடுக்கம்!
February 17, 2025
வார தொடக்க நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு.!
February 17, 2025