அக்டோபர் 16, ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள டி-20 உலகக்கோப்பை போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் அணி தனது புதிய ஜெர்சி யை அறிமுகப்படுத்தியுள்ளது.
டி-20 உலகக்கோப்பை போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவாகவே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தயாராகிக்கொண்டு வருகின்றனர்.
கடந்த வியாழன் அன்று பாகிஸ்தான் அணி, உலகக்கோப்பையில் விளையாடும் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது. நேற்று திங்கள் கிழமை பாகிஸ்தான் அணி, உலகக்கோப்பை போட்டிக்கான தனது புது ஜெர்சி யை அறிமுகப்படுத்தியது. இது குறித்து பாகிஸ்தான் அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில், அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
பாபர் அசாம் தலைமையில் விளையாடும் பாகிஸ்தான் அணி, டி-20 உலகக்கோப்பை போட்டித் தொடரில்அக்டோபர் 23 அன்று தனது முதல் போட்டியில், இந்திய அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.
unknown node