இந்தியாவிற்கு வந்த அடுத்த சோதனை….ஐசிசி எடுத்த அதிரடி முடிவு.!!

WTC23-Final FINE

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நேற்று இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்தியா மெதுவாக பந்து விசியதற்காக ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

இந்திய அணி  ஐசிசி நிர்ணயித்ததை விட 5 ஓவர்கள் குறைவாக வீசிய காரணத்தால் இந்தியாவிற்கு 100 % அபராதம் விதித்துள்ளது. அதைப்போலவே, ஆஸ்திரேலியா அணியும் 4 ஓவர்கள் குறைவாக  வீசியுள்ளதால், அவர்களின் போட்டி கட்டணத்தில் 80 சதவீதத்தை செலுத்தவேண்டும் என ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

ஐசிசி நடத்தை விதி 2.22ன் படி, வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பந்து வீசத் தவறினால் ஒவ்வொரு ஓவருக்கும் போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்ற விதிமுறை உள்ளது. அதன்படி, இரண்டு அணிக்கும் தற்போது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய கிரிக்கெட் வீரர் வீரர் ஷுப்மன் கில் அவுட் ஆனதற்கு நடுவரின் முடிவை விமர்சித்ததற்காக அவரது போட்டிக் கட்டணத்தில்  15% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், கில் அடித்த பந்தை கேமரூன் கிரீன் எடுத்த கேட்ச் அவுட் என மூன்றாவது நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோ தெரிவித்திருந்தார். நடுவரின் அந்த முடிவை கேள்விக்குட்படுத்தும் வகையில் ஷுப்மேன் கில் தனது சமூக வலைதள பக்கங்களில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்