இந்தியா – இலங்கை இடையே இன்று 2-வது டி20 போட்டி!

Published by
Edison

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையே இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெறுகிறது.

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று முன்தினம் லக்னோவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச தேர்வு செய்தது.

அதன்படி,களமிறங்கிய இந்திய அணி இறுதியாக 20 ஓவரில்  2 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்தனர்.200 ரன்கள் இலக்குடன் இலங்கை களமிறங்கிய இலங்கை அணிஇறுதியில், 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து இலங்கை அணி 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி முதல் டி20 போட்டியை 62 என்கிற பெரிய வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இதனால்,3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில்,இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையே இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெறுகிறது.இரு அணிகளும் மோதும் இப்போட்டியானது இன்று இரவு 7 மணிக்கு தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது.

அணிகள்:

சாத்தியமான இந்தியா லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்),இஷான் கிஷன் (வி.கீப்பர்),ஷ்ரேயாஸ் ஐயர்,சஞ்சு சாம்சன்,தீபக் ஹூடா,ரவீந்திர ஜடேஜா,வெங்கடேஷ் ஐயர்,ஹர்ஷல் படேல்,புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா,யுஸ்வேந்திர சாஹல்.

சாத்தியமான இலங்கை லெவன்: நிரோஷன் டிக்வெல்லா (வி.கீப்பர்), பதும் நிஸ்ஸங்கா, சரித் அசலங்கா, ஜனித் லியனகே, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனகா (கேப்டன்), சாமிக்க கருணாரத்னா, துஷ்மந்த சமீரா, ஜெப்ரி வான்டர்சே, பிரவீன் ஜெயவிக்ரமா,லஹிரு குமாரா.

Recent Posts

5 மற்றும் 8ஆம் வகுப்பில் ஃபெயில்! சிபிஎஸ்இ முடிவுக்கு அன்பில் மகேஷ் கடும் கண்டனம்!

5 மற்றும் 8ஆம் வகுப்பில் ஃபெயில்! சிபிஎஸ்இ முடிவுக்கு அன்பில் மகேஷ் கடும் கண்டனம்!

சென்னை : தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல்…

43 minutes ago

“பயங்கரவாதிகளை பிடிக்க பாகிஸ்தான் இந்தியாவுக்கு உதவும்!” அமெரிக்கா நம்பிக்கை!

வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

2 hours ago

Live : அதிமுக செயற்குழு கூட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…

3 hours ago

பாஜகவுடன் கூட்டணி ஏன்? இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்.!

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…

3 hours ago

ஷாக் கொடுத்த பாகிஸ்தான்.,, வாகா எல்லை மீண்டும் மூடல் – மக்கள் தவிப்பு.!

டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

4 hours ago

”முஸ்லிம்களையோ அல்லது காஷ்மீரிகளையோ றிவைக்க வேண்டாம்” – தாக்குதலில் கணவரை இழந்த ஹிமான்ஷி.!

ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…

5 hours ago