ரோகித் சர்மா, வார்னர்தான் உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்கள் என்று டாம் மூடி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளருமான டாம் மூடி
ட்விட்டர் வாயிலாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார்.அப்போது ரசிகர் ஒருவர்,டி-20 கிரிக்கெட்டில் உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் யார் என்று கேட்டார்.இதற்கு பதில் அளித்த டாம் , ‘‘இது மிகவும் கடினமான கேள்வி.
ஆனால் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் மற்றும் இந்திய வீரர் ரோகித் சர்மா ஆகியோரின் பெயர்களை சொல்வதில் மகிழ்ச்சி அடைவேன் என்று தெரிவித்தார்.மேலும் மற்றொரு ரசிகர் ஐபிஎல்லில் பிடித்த அணி மற்றும் கேப்டன் யார் என்றும் கேள்வி எழுப்பினார்.அதற்கு பதில் அளித்த டாம்,
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பிடித்த கேப்டன் மகேந்திர சிங் தோனி என்று கூறினார்.
unknown nodeunknown node