இதுதான் இந்தியா., இது அதற்கும் மேலானது – சேவாக் ட்வீட்

Published by
பாலா கலியமூர்த்தி

சொந்த ஊர் சின்னப்பம்பட்டியில் தமிழக வீரர் நடராஜனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்து இந்திய முன்னாள் வீரர் சேவாக் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. டி-20 மற்றும் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. ஆஸ்திரேலிய தொடரில் வலை பயிற்சி மேற்கொள்ள தமிழக வீரர் நடராஜன் இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.

பின்னர் இந்திய அணியில் முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விளையாட முடியாத சூழலில், நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை வீணடிக்காமல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சுலபமாக அனைவரது மனதிலும் இடம் பிடித்தார். அவரே எதிர்பார்க்காத வாய்ப்பு நடராஜனுக்கு கிடைத்தது. இவரது பந்துவீச்சை பார்த்து பலரும் பாராட்டினர்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு தாய் நாடு திரும்பிய நடராஜனை சின்னப்பம்பட்டியை சேர்ந்த மக்கள், மேளதாளத்துடன் அவரை சாரட் வண்டியில் ஆரவாரமாக அழைத்து வரப்பட்டார். நடராஜனை வரவேற்க ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு திரண்டனர். சாரட் வண்டியில் பயணித்த நடராஜனுக்கு இந்திய கோடியை போர்த்தி அவ்வூர் மக்கள் வரவேற்றனர்.

இந்நிலையில், நடராஜனுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பை குறித்து முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இதுதான் இந்தியா. இந்தியாவில் கிரிக்கெட் வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அதற்கும் மேலானது என்று நடராஜனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு வீடியோ காட்சியுடன் சேவக் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

6 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

7 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

7 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

8 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago