இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் !! இன்று 3 வது ஒரு நாள் போட்டி !!!

வெஸ்ட் இண்டீஸ் ,ஒருநாள் தொடர் oneday match இங்கிலாந்து ,England, West Indies,ஸ்டோக்ஸ் 79   ரன்கள், Stoks 79 runs

இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3 வது ஒரு நாள் போட்டி இன்று தொடங்குகிறது.

இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி கடந்த 20 ஆம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரமாக ஆடி 360 ரன்கள் குவித்தது.ஆனால் இந்த போட்டியில் 360 ரன்களை சேஸ் செய்து இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.

இந்நிலையில் நேற்று 2 வது ஒரு நாள் போட்டி நடைபெற்றது.இதில் முதலில் பேட்டிங் செய்த  வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் அடித்தது.இந்த போட்டியில் அதிக பட்சமாக ஹெட்மாயர் 104 ரன்கள் அடித்தார்.

இதன் பின்னர் 290 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 263 ரன்கள் மட்டுமே அடித்தது.இங்கிலாந்து அணியில் அதிக பட்சமாக ஸ்டோக்ஸ் 79   ரன்கள் அடித்தார்.

இதனால் 5 போட்டிகள் கொண்ட ஒரு தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில்  1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.இந்நிலையில் 3-வது ஒரு நாள் போட்டி இன்று மாலை 7 மணிக்கு தொடங்க உள்ளது.இன்று நடைபெறும்  போட்டியில் வெற்றி பெரும் அணி தொடரில் முன்னிலை வகிக்கும்.