நங்கள் பேட்டிங் நாங்கள் சரியாக செய்யவில்லை அது தான் தோல்விக்கு காரணம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது, அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 179 ரன்கள் எடுத்தனர். கடைசிவரை கே.எல் ராகுல் 91*, ஹர்பிரீத் 25* ரன்களுடன் களத்தில் நின்றனர்.
அதனை தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்து, இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டி முடிந்த வுடன் பேசிய பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி தோல்வி குறித்து கூறுகையில், ” பேட்டிங் நாங்கள் சரியாக செய்யவில்லை அது தான் தோல்விக்கு காரணம். அணியை வெற்றிப்பாதை நோக்கி பார்ட்னர்ஷிப் தான் அழைத்து செல்லும். பார்ட்னர்ஷிப்பில் தான் நாங்கள் தவறு செய்துவிட்டோம். டேல், ஜேமிசன் இருவரும் கடைசி நேரத்தில் சிறப்பாக பேட்டிங் செய்தனர். பஞ்சாப் அணி பேட்டிங் பவுலிங் இரண்டிலும் சிறப்பாக விளையாடியது. போட்டியில் முதலில் எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள், இறுதியில் தான் சொதப்பிவிட்டார்கள், இனி வரும் போட்டிகளில் இதுபோன்று தவறுகளை திருத்திக்கொண்டு சிறப்பாக விளையாடுவோம் என்று நம்புகிறேன்” என்றும் கூறியுள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…