ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
இந்தியாவுக்கு எதிராக கடந்த காலங்களில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு அடுத்த போட்டியில் விளையாடுவோம் என பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவூஃப் தெரிவித்துள்ளார்.

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கி மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், அனைவருடைய கவனமும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டியில் தான் இருக்கிறது. இரண்டு அணிகளும் வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் மோதுகிறது. எனவே, இரண்டு அணியை சேர்ந்த வீரர்களும் போட்டிக்கு தயாராகி வருகிறார்கள்.
இதற்கிடையில், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவூஃப் ஊடகம் ஒன்றுக்கு அளித்த போட்டியில் இந்தியாவை நாங்கள் வீழ்த்துவோம் என பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” ஏற்கனவே, துபாயில் நாங்கள் இந்தியாவை இரண்டு முறை வீழ்த்தியுள்ளோம். எனவே, திரும்பவும் அதே செய்து மூன்றாவது வெற்றியை பதிவு செய்வோம் என திட்டம் வைத்திருக்கிறோம். கடந்த காலங்களில் நாங்கள் இந்தியாவிடம் தோல்வி அடைந்திருக்கிறோம்.
கடந்த காலங்களில் நாங்கள் இந்தியாவிடம் தோல்வி அடைந்திருக்கிறோம். அந்த தோல்விகளில் இருந்து என்ன கற்றுக்கொள்ள வேண்டுமோ அதை தான் கற்று கொண்டு இருக்கிறோம். எனவே, நடைபெறவுள்ள போட்டிகளில் அந்த தவறுகளை திருத்தி கொண்டு விளையாடுவோம். எங்களுக்கு அழுத்தம் எதுவும் இல்லை நாங்கள் நிதானமாக எந்த ஒரு அழுத்தமும் இல்லாமல் விளையாட போகிறோம்.
ஆடுகளம் சில நேரங்களில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கலாம். எனவே ,நாங்கள் பாதையை மதிப்பிட்டு ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் ஏற்ப திட்டமிடுவோம். எப்படி போட்டால் விக்கெட் விழும் என்பது எல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டு நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்துவோம். நீங்கள் அனைவரும் என்னுடைய ஆட்டத்தைப் பார்த்தீர்கள், நான் 10 ஓவர்களையும் வீசினேன். என் உடற்தகுதி நன்றாக இருக்கிறது.
என்னுடைய மனதிலும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. எங்களால் முடிந்த எல்லா முயற்சியையும் நிச்சயமாக இந்த போட்டியில் கொடுப்போம்” எனவும் கூறியுள்ளார். ஏற்கனவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரு போட்டியில் மோதுகிறது என்றால் அந்த போட்டிக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். இந்த முறை இவர் இப்படி மீண்டும் இந்தியாவை தோற்கடிப்போம் என சவால் விடும் வகையில் பேசியது போட்டிக்கான மேலும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.