‘எப்போதெல்லாம் ரன் தேவையோ .. அவரோட பேட் தான் கேட்பேன்’ ! சதம் அடித்த பின் அபிஷேக் பேட்டி!

Abhishek Sharma

அபிஷேக் சர்மா : நேற்று நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா 46 பந்துக்கு சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். இந்த போட்டி முடிந்த பிறகு அவரது விளையாட்டை குறித்து பேசி இருந்தார்.

ஜிம்பாப்வே அணியுடனான 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரின், நேற்று நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதில் தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்து விளையாடினார். அவர் வெறும் 46 பந்துக்கு 100 ரன்கள் எடுத்து அசத்தினார், அதில் 8 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். இவர் 43 பந்துக்கு 72 ரன்களில் இருந்த போது, தொடர்ந்து 3 ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து சதத்தை பூர்த்தி செய்தார்.

இதன் மூலம் சர்வேதச டி20 போட்டிகளில் அதிவேக சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். இந்த போட்டி முடிந்த பிறகு அபிஷேக் சர்மா, அவரது விளையாடிய அந்த ஆக்ரோஷமான விளையாட்டினை குறித்து ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசிய போது, “நான் இன்று சுப்மன் கில்லின் பேட்டை வைத்ததுதான் விளையாடினேன், இதை நான் முன்பு செய்தேன். எனக்கு எப்போதெல்லாம் ரன் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம், நான் அவரது பேட்டை தான் கேட்பேன்.

இது எனது சிறப்பான ஆட்டம் என்று நினைக்கிறேன், நேற்று நாங்கள் சந்தித்த தோல்வி, எங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. இன்று என்னுடைய நாள் என்று நான் உணர்ந்தேன், அதை மனதில் வைத்து கொண்டு விளையாடினேன். டி20 போட்டி என்பது வேகமாக ரன்ஸ் எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறன் இதை நான் இறுதி வரை கொண்டு சென்றேன். என் மீது நம்பிக்கை வைத்த பயிற்சியாளர்கள், கேப்டன் மற்றும் அணி நிர்வாகத்திற்கு நான் நன்றியை கூறி கொள்ள விரும்புகிறேன்.

நான் எப்போதும் என் திறமையை நம்புகிறேன், அது என் நாளாக இருந்தால், அது முதல் பந்தாக இருந்தாலும் நான் அதனை அடித்து விளையாடுவேன்” என்று கூறினார். அபிஷேக் ஷர்மாவின் இந்த விரைவான சதத்தால் ரோஹித் சர்மா, சூரியகுமார் யாதவ், கே.எல். ராகுலுக்கு பிறகு 4-வது வீரராக இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த டி20 தொடரின் கேப்டனான சுப்மன் கில்லும், அபிஷேக் சர்மாவும் 12 வயது முதல் ஒன்றாக கிரிக்கெட் விளையாட தொடங்கினார்கள். அன்று முதல் அபிஷேக் சர்மாவுக்கு ரன் தேவைப்பட்டால் சுப்மன் கில்லிடம் பேட் வாங்கி தான் விளையாடுவாராம் அதை தான் அபிஷேக் பேசுகையில் குறிப்பிட்டு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies
Nikitha
TVK Vijay