கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்திற்கு… உலக கோப்பை டிக்கெட் எங்கு., எப்போது வழங்கப்படும்.? விவரம் இதோ…

இந்தாண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரையில் இந்த தொடர் இந்தியாவில் சென்னை , டெல்லி, அகமதாபாத், மும்பை உட்பட பல்வேறு மைதானங்களில் நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை பற்றிய விவரத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மற்றும் உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்திற்கான கிரிக்கெட் போட்டிகள் BookMyShow இணையத்தள பக்கத்தில் விற்பனைக்கு வரவுள்ளன. இந்தியாவைத் தவிர அனைத்து அணிகளின் பயிற்சி ஆட்டத்திற்கான விற்பனை ஆகஸ்ட் 25 முதல் தொடங்கும் எனவும், ஆகஸ்ட் 30 முதல், குவஹாத்தி மற்றும் திருவனந்தபுரத்தில் இந்தியா விளையாடும் பயிற்சி விளையாட்டுகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனைக்கு வரவுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் விளையாட்டை தவிர மற்ற போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 1ஆம் தேதி துவங்கப்பட உள்ளது. அதே போல, செப்டம்பர் 3ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை துவங்கவுள்ளது. அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது.
ஆன்லைனில் முன்னதாக ஆகஸ்ட் 15 முதலே ஆர்முள்ளவர்கள் விண்ணப்பிக்க கோரப்பட்டு இருந்தது.அதன்படி பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கூறப்படுகிறது. ஒரு நபர் 4 டிக்கெட்களை முன்பதிவு செய்ய முடியும்.
கூரியர் மூலம் டிக்கெட் வேண்டும் என முன்பதிவு செய்வோருக்கு டிக்கெட் கட்டணத்தில் இருந்து கூடுதலாக 140 ரூபாய் வசூலிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025
ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!
May 8, 2025