AUSvIND: இன்று தொடங்குகிறது 3 ஆம் டெஸ்ட்.. வெற்றி பெறுமா இந்திய அணி?

AUS and IND is playing four-match Test series. With two teams tied 1-1, the third Test will be played in Sydney at 5.00 am Indian time today.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இதில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ள நிலையில், மூன்றாம் டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 5.00 மணிக்கு சிட்னியில் நடைபெறவுள்ளது.

இந்த தொடரில் விளையாடவுள்ள 18 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அண்மையில் அறிவித்தது. அதில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்க்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் தொடரில் இருந்து வெளியேறினார். இதனால் அவருக்கு பதில் யாக்கர் மன்னன் நடராஜன் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். ஆனால் விளையாடும் வீரர்களின் பட்டியலில் நடராஜன் இடம்பெறவில்லை.

மேலும் இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா இந்திய அணியில் துணை கேப்டனாக செயல்படுகிறார். இந்த மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி 108 டெஸ்ட் போட்டிகள் விளையாடியது. அதில் 60 போட்டிகளில் வெற்றியும், 28 போட்டிகளில் தோல்வியும், 20 போட்டிகள் டிராவில் முடிந்தது. அதே சிட்னி மைதானத்தில் இந்திய அணி இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அதில் 1 வெற்றியும், 5 தோல்வியும், 6 போட்டிகள் டிராவில் முடிந்தது. இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துகிறது.