இலங்கையை அணியை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேறுமா ? இந்தியா !

Published by
murugan

இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது.அதில் முதல் போட்டியில் இந்திய அணியும் , இலங்கை அணியும் மோத உள்ளது. இப்போட்டி   லீட்ஸில்  உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது.

இந்திய  அணி நடப்பு உலகக்கோப்பையில் 8 போட்டியில் விளையாடி 6 போட்டியில் வெற்றியும் ,1  போட்டியில் தோல்வியும் தழுவி உள்ளது. அதில் ஒரு போட்டி மழையால் ரத்தானது.இதனால் புள்ளி பட்டியலில் 13 புள்ளிகள் பெற்று  இரண்டாம்  இடத்தில் உள்ளது.

Image result for Sri Lanka vs India

இலங்கை அணி நடப்பு உலகக்கோப்பையில் 8 போட்டியில் விளையாடி 3 போட்டி  வெற்றியும் , 3 போட்டியில் தோல்வியும் அடைந்து உள்ளது. அதில் இரண்டு போட்டி மழையால் ரத்தானது. இதனால் புள்ளி பட்டியலில் 8 புள்ளிகள் பெற்று ஆறாவது  இடத்தில் உள்ளது.

மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் ,தென்னப்பிரிக்கா அணியும் மோத உள்ளது.மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி மாலை 6 மணிக்கு தொடங்க உள்ளது.

ஆஸ்திரேலிய அணி எட்டு போட்டிகளில் விளையாடி ஏழு போட்டியில் வெற்றி பெற்று உள்ளது.ஒரு போட்டி தோல்வியடைந்தது. 14 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

தென்னப்பிரிக்கா அணி எட்டு போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டியில் வெற்றியும் , ஐந்து போட்டியில் தோல்வியும் அடைந்து உள்ளது.ஒரு போட்டி மழையால் நின்றது மொத்தமாக 5 புள்ளிகள் பெற்று எட்டாவது இடத்தில் உள்ளது.

இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் முதலிடத்திற்கு செல்லும்.மேலும் முதலிடத்திற்கு சென்றால் இந்திய அணி நியூஸிலாந்து அணியுடன் அரையிறுதியில் மோதும். தோல்வியடைந்தால் மீண்டும் இங்கிலாந்து அணியுடன் விளையாடும்.

Published by
murugan

Recent Posts

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

14 minutes ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

26 minutes ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

1 hour ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

4 hours ago