நடுக்கடலில் காதலை உறுதி செய்த ஹர்திக் பாண்டியா .!

Default Image
  • புத்தாண்டை முன்னிட்டு  ஐக்கிய அரபு அமீரகத்தில் தனக்கும் நடாஷாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக ஹர்திக் பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி உள்ளார்.
  • நடாஷா தமிழில் “அரிமா நம்பி” திரைப்படத்தில் இடம் பெற்ற “நான் உன்னில் பாதி” என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

நடிகை நடாஷா ஸ்டான் இந்தியில் “சத்யாகிரகஹா” படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அறிமுகமானார். பின்னர் சில படங்களில் பாடல்களுக்கு நடனமாடினார்.இதைத்தொடர்ந்து தமிழில் “அரிமா நம்பி” திரைப்படத்தில் இடம் பெற்ற “நான் உன்னில் பாதி” என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவும் நடஷாவும் காதலிப்பதாக சமீபத்தில் செய்திகள் பரவி வந்தது. இது குறித்து குறித்து இருவரும் ஒன்றும் கூறாமல் இருந்தனர்.இதை தொடர்ந்து கடந்த அக்டோபர் 11-ம் தேதி ஹர்திக் பாண்டியாவின் பிறந்த நாள் அன்று நடாஷா வாழ்த்து தெரிவித்தது சமூக வலைதளங்களில் வைரலானது.

 

View this post on Instagram

 

Forever yes ????????❤️ @hardikpandya93

A post shared by ????Nataša Stanković???? (@natasastankovic__) on

புத்தாண்டை முன்னிட்டு  ஐக்கிய அரபு அமீரகத்தில் தனக்கும் நடாஷாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக ஹர்திக் பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி உள்ளார். அதில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மோதிரம் மாற்றிக் கொண்டு புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

Mai tera, Tu meri jaane, saara Hindustan. ???????? 01.01.2020 ❤️ #engaged

A post shared by Hardik Pandya (@hardikpandya93) on

ஹர்திக் பாண்டியா கடந்த செப்டம்பர் மாதம் தென்னாப்பிரிக்க எதிரான டி20 போட்டியில் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அதன் பின்னர் எந்த தொடர்களில் அவர் விளையாடவில்லை.

இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களிலும் இவர் பெயர் அறிவிக்கப்படவில்லை. ஆனால் நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இந்திய ஏ அணி விளையாடும் தொடரில் இடம் பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies