இன்று தென்னாபிரிக்கா அணியுடன் , இந்திய அணி தனது மூன்றாவது டி 20 போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்து
முதலில் களமிறங்கிய இந்திய அணி ஆட்டம் தொடக்கத்திலேயே விக்கெட்களை இழந்தனர். ரோகித் சர்மா 9 ரன்களில் வெளியேறினார். பின்னர் நிதானமாக அதிரடியாக விளையாடிய தவான் 36 ரன்கள் குவித்தார். இதைத்தொடர்ந்து விளையாடிய கோலி 9 ரன்னுடன் வெளியேறினார்.
பின்னர் பண்ட் 19 ரன்களில் சேர்த்தார்.பிறகு இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்னில் வெளியேற இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 134 ரன்கள் எடுத்தது. தென்னாபிரிக்கா அணியில் அதிகபட்சமாக ரபாடா 3 விக்கெட்டை பறித்தார். 135 ரன்கள் இலக்குடன் தென்னாபிரிக்கா அணி களமிறங்கியது.
தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களான ஹென்ரிக்ஸ் மற்றும் டி காக் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பத்து ஓவர்கள் முடிவில் தென்னாபிரிக்க அணி 76 ரன்கள் குவித்து விக்கெட் இழக்காமல் இருந்தனர். இதன் பிறகு 11வது ஓவரின் முதல் பந்தை வீசிய ஹர்திக் பாண்டியா ஹென்ரிக்ஸ் விக்கெட்டை பெற்றார்.
இதன் பிறகு டி காக்வுடன் டெம்பா பவுமா ஜோடி சேர்ந்து 16.5 ஓவரின் முடிவிலே 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இதில் டி காக் 5 சிக்ஸ் விளாசி 79 ரன்களை குவித்துள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…