கொரோனா வைரஸ் காரணமாக ஹோட்டல் தொடங்க மாநில அரசுகள் நிபந்தனையுடன் அனுமதி அளித்து வருகிறது. இருப்பினும், விதிகளை மீறி சில இடங்களில் இரவு வரை ஹோட்டல்கள் திறந்து வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மும்பை விமான நிலையத்திற்கு அருகிலுள்ள டிராகன் ஃப்ளை கிளப்பில் அதிகாலை 3 மணியளவில் மும்பை காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது, மும்பை காவல்துறை நடத்திய சோதனையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, பாடகர் குரு ரந்தாவா ஆகியோர் அந்த கிளப்பில் நடந்த மீட்டிங்கில் கலந்து கொண்டு இருந்தனர். இந்நிலையில், கொரோனா விதிகளை மீறி செயல்பட்டதாகவும், கூட்டமாக கூடியதாகவும், இரவில் நீண்ட நேரம் கிளப்பில் இருந்ததாக கூறி சுரேஷ் ரெய்னா கைது செய்யப்பட்டார்.
பின்னர், கைது செய்யப்பட்ட ரெய்னா பெயிலில் விடுவிக்கப்பட்டார். இதில் 27 ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர். கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக மும்பை காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ 5 மணி நேரமாக எரிந்து வரும் நிலையில்,…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த 24 குடும்பத்தினருக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக #TNDemands…
சென்னை : பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 13) காலை காலமானார். உடல்…
சென்னை : அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை சிவானந்தா சாலையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்னும் சற்றுநேரத்தில்…
சென்னை : திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே இன்று (ஜூலை 13) அதிகாலை 5:20 மணியளவில் சென்னை மணலியில் இருந்து…
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…