இங்கிலாந்து அணி நியூஸிலாந்தில் சுற்று பயணம் செய்து தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.கடந்த 21-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது.முதலில் இறங்கிய இங்கிலாந்து அணி 353 ரன்னிற்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
நியூஸிலாந்து அணியில் டிம் சவுதி 4 , நீல் வாக்னர் 3 விக்கெட்டையும் பறித்தனர்.இதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்கியது.நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் நியூஸிலாந்து அணி 394 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டை பறிகொடுத்து இருந்தது.
களத்தில் வாட்லிங் 119 , சன்ட்னர் 31 ரன்களுடன் இருந்தனர்.இதை தொடர்ந்து இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கிய நியூஸிலாந்து அணி சிறப்பாக விளையாடி சன்ட்னர் சதம் அடித்து 126 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர் நிலைத்து நின்று விளையாடிய வாட்லிங் இரட்டை சதம் அடித்து 205 ரன்னில் வெளியேறினார்.இறுதியாக நியூஸிலாந்து அணி 9 விக்கெட்டை இழந்து 615 ரன்கள் எடுத்து இருந்த போது டிக்ளர் செய்தனர்.இதனால் நியூஸிலாந்து அணி 262 ரன்கள் முன்னிலையில் இருந்தது.வாட்லிங் , சன்ட்னர் இருவரின் கூட்டணியில் 250 ரன்கள் குவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…