#Breaking: டிஎன்பிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு- தமிழக கிரிக்கெட் சங்கம்!

ஜூன் 10ஆம் தேதி தொடங்கவிருந்த டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி, கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் தெரிவித்தார்.
ஐபிஎல் தொடரை போல, தமிழக மாவட்டத்திற்கிடையே நடைபெறும் தொடர், டிஎன்பிஎல் போட்டிகள். இந்த போட்டிகளில் நன்றாக விளையாடும் நபர்கள், ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வாய்ப்புகள் உண்டு. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால், பல விளையாட்டு போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தாண்டு ஜூன் 10ஆம் தேதி தொடங்கவிருந்த 5 ஆம் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் போட்டிகள் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி தெரிவித்தார். மேலும், டிஎன்பிஎல் போட்டிகளுக்கான புதிய அட்டவணை வரும் நாட்களில் வெளியாகும் எனவும் அவர் கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025