இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா இந்திய அணி..!

இன்று இந்தியா ,தென்னாபிரிக்கா இடையிலான மூன்றாவது டி20 போட்டி நடைபெற உள்ளது. முதல் போட்டி மழையால் ரத்தானது.இரண்டாவது போட்டியில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் மிகச்சிறப்பாக செயல்பட்டது.அதனால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் கேப்டன் கோலி சிறப்பாக விளையாடினார்.
விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் தனது வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் இன்றைய போட்டியில் அவர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய அவசியமாக உள்ளது.
தென்னாபிரிக்கா அணி இளம் வீரர்களை கொண்டுள்ளது. டிகாக் , மில்லர் போன்ற சிறந்த வீரர்கள் இருந்தும் தென்னாபிரிக்க அணி தடுமாறி வருகிறது. இரண்டாவது போட்டியில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு இன்று தென்னாபிரிக்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கியது. இப்போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025