சேலத்தில் டிசம்பர் 17ம் தேதி திமுக இளைஞரணி 2வது மாநாடு நடைபெறும் என தலைமை கழகம் அறிவித்திருந்தது. கடந்த 2007, டிச. 15ல் திமுக இளைஞரணியின் முதல் மாநாடு நடைபெற்ற நிலையில், தற்போது கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு பிறகு திமுக இளைஞரணியின் 2வது மாநாடு சேலத்தில் டிச.17ம் தேதி நடைபெற உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், 2007ம் ஆண்டு டிச.15 அன்று கழக வரலாற்றில் முத்திரை பதித்து, திருப்புமுனை ஏற்படுத்திய திமுக.இளைஞர் அணி முதல் மாநில மாநாட்டினை தொடர்ந்து, […]