கொரோனா காலத்தில் மூக்கு மற்றும் தொண்டைப் பகுதி ஆகிய இரண்டிலிருந்து சுரக்கும் நீரை சேகரிப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் நியமிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர்களை,தற்போது பணியிலிருந்து விடுவிப்பது கண்டிக்கத்தக்கது என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட தற்காலிக ஆய்வக உதவியாளர்களை எவ்வித கால அவகாசமும் தராமல்,நவ.30 ஆம் தேதியன்று ‘இன்று தான் உங்களின் கடைசி பணி நாள்’ என்று தெரிவித்து உடனடியாக பணியிலிருந்து விடுவிப்பதும், நான்கு மாதங்களுக்கான ஊதியத்தை தராமல் இருப்பதும் கண்டிக்கத்தக்கது என்றும்,அவர்களது கோரிக்கையை முழுமையாக நிறைவேற்றவும், […]