500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகை ராக்கம்மாள் காலமானார். நடிகை ரங்கம்மாள் 500க்கும் மேற்பட்ட தமிழ், மலையாளம், இந்தி மொழி ஆகிய மொழித் திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்த பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவர் தனது இறுதி காலத்தில், வறுமையின் காரணமாக மெரினா கடற்கரையில் கைக்குட்டை விற்று வந்தார். இந்த நிலையில், நடிகை K.R.ரங்கம்மாள் பாட்டி உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.