இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் இன்று காலை 7 தொழிலாளர்கள் பயணித்த வாகனம் ஒன்று விபத்து ஏற்பட்டத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மஹிந்திரா பிக்கப் வாகனம் மூலம் 7 தொழிலாளர்கள் மண்டியிலிருந்து, சுந்தர்நகருக்கு சென்று கொண்டிருந்தபோது ஆற்றில் வாகனம் விழுந்தபோது ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், காயமடைந்த ஒருவர் மண்டல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். பயணிகள் அனைவரும் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்று மண்டி காவல் கண்காணிப்பாளர் ஷாலினி அக்னிஹோத்ரி தெரிவித்தார். […]