டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து குறித்து அவதூறு பரப்பும் வகையில், விளம்பரங்களை வெளியிட்டதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிராக டாபர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. டாபர் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், பதஞ்சலியின் விளம்பரங்கள் டாபரின் தயாரிப்பை அவதூறாக சித்தரித்ததாகவும், அவற்றில் 47 ஆயுர்வேத மருந்துகள் மட்டுமே உள்ளன என்றும், பதஞ்சலியின் தயாரிப்பில் 51 மருந்துகள் உள்ளதாகவும் ஒப்பீடு செய்து மக்களை தவறாக […]