சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும் வைரலானது. இந்த செய்தி உண்மையா அல்லது வதந்தியாக பரவும் செய்தியா? என பலரும் குழப்பத்தில் இருந்தனர். இதனையடுத்து, இப்படி வெளியான செய்தி முற்றிலும் தவறானது என்று தமிழ்நாடு சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் திட்டவட்டமாக தெரிவித்தார். ஜூலை 7, 2025 அன்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், நாளிதழ் ஒன்றில் வெளியான “போதிய ஊழியர்கள் இல்லாததால் 501 […]