சென்னை : ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவர் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவி ஒருவர் வெளிப்படையாகவே பேட்டி கொடுத்து புகார் அளித்திருந்தார். தான் மட்டுமின்றி பல பெண்கள் இதைப்போல பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், பேசியிருந்தார். இதனையடுத்து, தெய்வச்செயல் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அரக்கோணம் மகளிர் காவல் நிலையப் போலீஸார் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அரக்கோணம் […]