அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் தகவலை அமெரிக்க நிர்வாகமே இந்தியாவிற்கு வழங்கியுள்ளதாம். அமெரிக்க நீதித்துறை வழங்கிய தகவலின்படி, தப்பியோடிய பொருளாதார குற்றவாளி நிரவ் மோடியின் சகோதரர் ஜூலை 4 ஆம் தேதி அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அமலாக்க இயக்குநரகம் (ED) மற்றும் மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) இணைந்து செய்த நாடுகடத்தல் கோரிக்கைக்குப் […]