ரஷ்யாவின் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்த தமிழ் மாணவர்களின் உடல்கள் ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை வந்தடையும் என்று பாஜக மாநில தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வோல்காகிராட் பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைகழகத்தில் தமிழகத்தை சேர்ந்த பல மாணவர்கள் படித்து வருகின்றனர். அதில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்குள்ள வோல்கா நதிக்கரைக்கு சென்று குளிக்கும் போது ஒரு மாணவரை தண்ணீர் அடித்து சென்று விட்டது. அவரை காப்பாற்ற முயற்சித்த சக மாணவர்களில் மூன்று பேரும் […]