இன்று சென்னை தினம் கொண்டாடப்படும் நிலையில், வந்தாரை வாழவைக்கும் சிங்கார சென்னை மக்களுக்கு வாழ்த்துக்கள் என முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் ஆகஸ்டு 22 ஆம் தேதி சென்னை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இன்று முதல் ஒரு வாரத்திற்கு சென்னை மாநகராட்சியில் சென்னை தினம் கொண்டாடப்படும். இந்நிலையில் இந்த சென்னை தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை உள்ளிட்ட மாநகராட்சியின் பல கட்டிடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்துக் கொண்டிருக்கின்றன. […]