சென்னை : மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டதாகவும், தற்போது நலமுடன் இருப்பதாகவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காலை நடைப்பயிற்சியின்போது லேசான மயக்கம் ஏற்பட்டதால், ஜூலை 21ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்பொது, அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தற்போது நலமுடன் உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். இன்று அமைச்சர் துரைமுருகன், முதல்வர் உடல் நலன் விசாரித்துவிட்டு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய போது […]