”முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ சிகிச்சை”- அமைச்சர் துரைமுருகன் கொடுத்த அப்டேட்.!
முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது, முதலமைச்சர் தற்போது நலமோடு உள்ளார் என்று அமைச்சர் துரைமுருகன் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை : மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டதாகவும், தற்போது நலமுடன் இருப்பதாகவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காலை நடைப்பயிற்சியின்போது லேசான மயக்கம் ஏற்பட்டதால், ஜூலை 21ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்பொது, அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தற்போது நலமுடன் உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
இன்று அமைச்சர் துரைமுருகன், முதல்வர் உடல் நலன் விசாரித்துவிட்டு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய போது செய்தியாளர்களிடம் பேசுகையில், ”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆஞ்சியோ பண்ணி பாத்தாங்க.. ஒரு சின்ன அடைப்பு கூட இல்ல… நல்லா இருக்காரு… எப்போது டிஸ்சார்ஜ் என்று மருத்துவர்கள் கூறுவார்கள்” என்று தெரிவித்துளார்.
ஸ்டாலின் மருத்துவமனையிலிருந்து பணிகளைத் தொடர்கிறார், மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி விரைவில் வெளியேறுவார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி மூன்று நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டியிருப்பதால், திருப்பூர் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.