பெட்ரோல் ,டீசல் விலை குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரக்கோரி நோட்டீஸ் கொடுத்துள்ளார். ஜனவரி 29-ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. ஜனவரி 29 -ஆம் தேதி முதல் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை முதல் அமர்வும், மார்ச் 8 -ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை 2-வது அமர்வும் நடைபெறுகிறது.கடந்த 29-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. […]