தெலுங்கானா : ஹைதராபாத் மாதப்பூர் ஏரி நிலத்தை ஆக்கிரமித்திருந்த நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான கட்டடம் இடிக்கப்ட்டது. ஹைதராபாத்தின் மாதாப்பூரில் அமைந்திருந்த மிகவும் பிரமாண்டமான ‘N Convention’ அரங்கம் இடிக்கப்பட்டது. தம்மி செருவு என்ற ஏரியில் 3.5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்த புகாரின் அடிப்படையில், மாநகராட்சி அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர். ஐதராபாத் தும்மிடிகுண்டாவில் 1.12 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து நாகார்ஜுனா கட்டடம் கட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 4 ஏக்கர் பரப்பளவில் கன்வென்ஷன் சென்டர் கட்டிய நாகார்ஜுனா […]