மகாராஷ்டிரா : புனே மாவட்ட மலாட் பகுதியில் ஐஸ்கிரீமில் மனித விரல் துண்டு கிடப்பதை கண்டெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது Yummo என்ற ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியருக்கு சொந்தமானது என்பது காவல்துறையினரால் பெறப்பட்ட டிஎன்ஏ அறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த ஜூன் 12ஆம் தேதி ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட ஐஸ்கிரீம் கோனில் மனித விரல் துண்டு இருப்பதை மலாட் பகுதியை சேர்ந்த MBBS மருத்துவர் பிராண்டன் செர்ராவ் கண்டுபிடித்தபோது இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு […]