உலகளவில் ஈர்க்கப்பட்ட சீனாவின் புகழ்பெற்ற யானைக்கூட்டம் தற்போது அதன் சொந்த வாழிடத்தை நெருங்கி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சீனாவின் யுனான் மாகாணத்தில் வசித்து வந்த 15 யானைகள் கடந்த ஜூன் மாதத்தில் அதன் வாழ்விடத்திலிருந்து சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவு கடந்து சுற்றி திரிந்து வந்தது. இந்த யானைக்கூட்டம் சீனாவின் தென்கிழக்கு பகுதியில் நடமாட தொடங்கியது. யானைக்கூட்டங்கள் ஒன்றாக சுற்றி திரிந்து பல விளைநிலங்களை சேதப்படுத்தவும் செய்தது. மக்கள் வாழ்விடங்களில் புகுந்து பல சேட்டைகளும் செய்தது. […]