மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவக்குழு தகவல். கடந்த 28-ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்திற்கு திடிரென தலை சுற்றல், மயக்கம் ஏற்பட்டு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கழுத்து பகுதி வழியாக மூளை மற்றும் முகம், இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் கூறப்பட்டது. இதையடுத்து, ரஜினிக்கு ரத்த ஓட்டத்தை சீரமைப்பதற்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. சிறப்பு மருத்துவ குழுவினர் தொடர்ந்து ரஜினிகாந்தின் உடல்நிலையை […]