இன்று நடைபெற்ற டி20 மகளிர் உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது. ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும் மோதியது. இதில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்த் விளையாடியது. அதன்படி, களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதன்பிறகு, சிறுது நேரத்தில் முதல் விக்கெட்டை இழந்தாலும் […]
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 4-வது போட்டியாக நேற்று நியூசிலாந்து மகளிர் அணியும் இந்திய மகளிர் அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி மிகச்சிறப்பாக விளையாடி 160 ரன்கள் எடுத்தது. அதிலும், அந்த மகளிர் அணியின் கேப்டனான டெவின் 57 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். மேலும் இந்த 160 ரன்கள் எட்டுவதற்கு மிக முக்கியக் காரணமாகவும் அவர் அமைந்திருந்தார். அதைத் தொடர்ந்து அடுத்ததாக களமிறங்கிய இந்திய மகளிர் அணி வீராங்கனைகளின் […]
ஷார்ஜா : மகளிர் உலகக்கோப்பை 2024 தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியும், இலங்கை மகளிர் அணியும் மோதியது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாத்திமா சனா மீது ஒருவர் அவருடைய கேப்டன்சி பற்றி விமர்சித்துப் பேசியிருந்தார். அவர் வேறு யாரும் இல்லை, பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரும், பாகிஸ்தான் வீராங்கனை அலியா ரியாஸின் கணவருமான அலி யூனிஸ் தான். இவர், பாகிஸ்தான் அணி […]
சென்னை : 2024 க்கான மகளிருக்கான டி20 உலகக்கோப்பைத் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த தொடரில் 2 போட்டிகள் முடிந்த நிலையில், இன்றும் இரண்டு போட்டிகள் நடைபெற இருக்கிறது. அதில், இந்திய அணிக்கு இன்று இரவு நியூஸிலாந்து மகளிர் அணியுடன் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த முறை நடைபெறும் இந்த உலகக்கோப்பை தொடருக்கு இந்திய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இந்த நிலையில், இந்திய அணிக்கு அறிவுரை கூறும் […]
ஷார்ஜா : மகளிருக்காக நடைபெற்று வரும் உலகக்கோப்பைத் தொடரில் 2-வது போட்டியானது நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியும், இலங்கை மகளிர் அணியும் மோதியது. முன்னதாக நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து அதே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, ஓப்பனிங் களமிறங்கிய வீராங்கனைகள் இருவரும் சொற்பரன்களில் […]
ஷார்ஜா : மகளிருக்கான டி20 உலகக்கோப்பைத் தொடரானது இன்று கோலாகலமாக ஷார்ஜாவில் தொடங்கியது. இந்த தொடரின் முதல் போட்டியாக வங்கதேச மகளிர் அணியும், ஸ்காட்லாந்து மகளிர் அணியும் சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் மோதினார்கள். இதில், டாஸ் வென்ற வங்கதேச மகளிர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, பேட்டிங் களமிறங்கிய வங்கதேச அணிக்கு நல்லதொரு தொடக்கம் அமையவில்லை. இதனால், தட்டி தட்டியே அந்த அணியால் ரன்களை சேர்க்க முடிந்தது. அதிலும், 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சோபனா […]
ஷார்ஜா : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மகளிருக்கான டி20 உலகக்கோப்பையின் 9-வது தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. இந்த உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இன்றைய நாளில் 2 போட்டிகள் நடைபெறவுள்ளது. அந்த இரண்டு போட்டியும் ஒரே மைதானமான ஷார்ஜா மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், முதல் போட்டியாக வங்கதேச மகளிர் அணியும், ஸ்காட்லாந்து மகளிர் அணியும் பிற்பகல் 3.30 மணிக்கும், அதனைத் தொடர்ந்து 2-வது […]
ஷார்ஜா : ஐசிசியின் மகளீருக்கான டி20 உலகக்கோப்பையின் 9-வது தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. இதில், இன்றைய நாளில் 2 போட்டிகள் நடைபெறவுள்ளது. முதல் போட்டியாக வங்கதேச மகளீர் அணியும், ஸ்காட்லாந்து மகளீர் அணியும் பிற்பகல் 3.30 மணிக்கு மோதவுள்ளது. இந்த போட்டியானது ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மேலும், அதனைத் தொடர்ந்து இன்றைய நாளில் 2-வது போட்டியாக பாகிஸ்தான் மகளீர் அணியும், இலங்கை மகளீர் அணியும் இரவு 7.30 மணிக்கு […]
துபாய் : இந்த ஆண்டில் கடந்த ஜூன் மாதம் ஆண்களுக்கான டி20 உலகக்கோப்பையானது நடைபெற்றது. அதில் இந்திய அணி இறுதி போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வென்று அசத்தியது. தற்போது, மகளீருக்கான டி20 உலகக்கோப்பை தொடரானது நாளை (அக்-2) தொடங்கவுள்ளது. இந்த தொடரின் போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற இருக்கிறது. நாளைத் தொடங்கும் இந்த தொடரில் முதல் போட்டியாக வங்கதேச மகளீர் அணியும், ஸ்காட்லாந்து மகளீர் அணியும் மோதவுள்ளது. இதற்கு முன் நடைபெற்ற எந்த […]
துபாய் : ஐசிசியின் அடுத்த கட்ட தொடரான மகளீருக்கான டி20 உலகக்கோப்பை வரும் அக்- 3 முதல் அக்-20 வரை துபாயில் நடைபெற இருக்கிறது. அந்த தொடருக்கு முன்னதாக வார்ம்-அப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று இந்திய மகளீர் அணிக்கும், வெஸ்ட் இண்டீஸ் மகளீர் அணிக்கும் வார்ம்-அப் போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளீர் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதனால், இந்திய மகளீர் அணி முதலில் பேட்டிங் செய்ய […]
மும்பை : ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரை இந்தியாவில் நடத்த மாட்டோம் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய்ஷா, ஆகஸ்ட் 14 மும்பையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்திய டி20 மகளிர் உலகக்கோப்பை நடத்துவது பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார். வங்கதேசத்தில் கலவரம் நடந்து வருவதால் டி20 மகளிர் உலகக்கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான பேச்சுவார்த்தை போய்க்கொண்டு இருந்ததாக […]