ஆயுர்வேதம் படித்த மாணவர்கள் எந்தொரு அடிப்படை பயிற்சியும், படிப்பும் இல்லாமல் அறுவை சிகிச்சை மருத்துவர்களாக அறிவிக்கப்பட்ட அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்தியாவில் தேசிய கல்வி கொள்கை மூலமாக ஆயுஷ் மருத்துவமுறையை பயின்ற மருத்துவ மாணவர்கள் அவர்களுடைய விருப்பம் போல் அலோபதி மருத்துவமுறையை பயின்றுகொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியானது. இதனால் அலோபதி மருத்துவமுறையில் குறைந்தபட்சம் 5½ ஆண்டுகள் இளநிலை எம்.பி.பி.எஸ். படிப்பும், நீட் நுழைவு தேர்வு எழுதிய பின்னரே அறுவை சிகிச்சை மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். […]