காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் அரசு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு மற்ற நாடுகளின் உதவியை நாடும் எந்த பலனும் இல்லாமல் போனது. இதனால் தொடர்ந்து தனது எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லண்டனிலுள்ள இந்திய தூதரகத்துக்கு எதிரே பாகிஸ்தானியர்கள் மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ளவர்கள் […]