Tag: ISSUE

அதிமுக எம்எல்ஏக்கு கொரோனா தொற்று…. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதி…

திருநெல்வேலி  மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் அ.தி.மு.க.வை சேர்ந்த ரெட்டியார்பட்டி நாராயணன். இவர் சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்றார். பின்னர் கடந்த 17-ந் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் நெல்லை திரும்பினார். அதன் பிறகு அவர் தினமும் தொகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து மக்கள் பணி ஆற்றி வந்தார். பல்வேறு திட்ட பணிகள் தொடக்க விழாவிலும் கலந்து கொண்டார். மேலும் கொரோனா தொற்றால் பொதுமக்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், நாங்குநேரி தொகுதியில் அனைத்து […]

#MLA 4 Min Read
Default Image

மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சிறப்பு யாகம்….

தமிழகத்தில், மீண்டும் அ.தி.மு.க.,  ஆட்சி அமைக்க வேண்டி, திருவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தியுள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்ற கழக  இளைஞர் பாசறை மாநில துணை செயலர், கோவை விஷ்ணுபிரபு என்பவர், நேற்று காலை, 10:45 மணிக்கு மனைவி, மகன் உட்பட ஐந்து பேருடன், தனி ஹெலிகாப்டரில் திருவில்லிபுத்துார், சி.எம்.எஸ்., பள்ளி மைதானத்தில் வந்து இறங்கினார். அங்கிருந்து, காரில் ஆண்டாள் கோவில் சென்று தரிசனம் செய்தனர். சக்கரத்தாழ்வார் சன்னிதியில், ஜெயலலிதா படத்துடன், ரகுபட்டர் தலைமையில் நடந்த […]

#ADMK 3 Min Read
Default Image

ஐநாவில் காஷ்மீர் பிரச்சனையை எழுப்பிய துருக்கி அதிபர்… இந்தியா கடும் கண்டனம்…

ஐக்கிய நாடுகளின்  பொதுச்சபையில் காஷ்மீர் பிரச்னை குறித்து துருக்கியின்  அதிபர் எர்டோகன் பேசியது முழுமையாக ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல’ என்று இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக, ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக பொதுச்சபை கூட்டத்தில் உலகத் தலைவர்கள் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்களின் உரை, வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, மாநாட்டில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்திய பிரதமர் மோடியின் உரை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இந்நிலையில், […]

#Kashmir 4 Min Read
Default Image

ஜெ.ஜெ நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை அமைக்கும் பணி முடிவு… விரைவில் நினைவிடம் திறப்பு…

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டு வந்த பீனிக்ஸ் பறவை வடிவமைக்கும் பணி நேற்றுடன் நிறைவடைந்தது. ஜெயலலிதா அவர்களின் நினைவிடம் வரும் அக்டோபர் 2-வது வாரத்தில் பணிகள் முடிக்கப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்நிலையில் நினைவிடத்தில் ராட்சத அளவிலான பீனிக்ஸ் பறவை போன்ற வடிவம் அமைக்கும் பணி நேற்றுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து நினைவிடத்தில் மெருகேற்றும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கூறுகையில், ‘50 ஆயிரத்து 422 சதுர […]

ISSUE 4 Min Read
Default Image

உபரி நீரை தந்து தர வேண்டிய நீரை தராமல் ஏமாற்றியுள்ளது கர்நாடகா… தமிழக அரசு சார்பில் கோரிக்கை…

தமிழகத்திற்கு உபரி நீரை தந்து, தர வேண்டிய நீரை தராமல்  கர்நாடகா ஏமாற்றியுள்ளது’ என, காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில் முறையிடப்பட்டு உள்ளது. காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு  தலைவர் நவீன்குமார் தலைமையில், டெல்லியில் நேற்று கூடியது. இதில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் தமிழகத்தின் சார்பில், காவிரி தொழிற்நுட்பப் பிரிவு தலைவர் சுப்பிரமணியம் மற்றும் நீர்வளத் துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி உள்பட  நான்கு அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, […]

ISSUE 4 Min Read
Default Image

புதிய கல்வி கொள்கை தொடர்பாக இன்று கருத்து கேட்பு… இணையம் மூலம் தெரிவிக்கலாம்

நாடு முழுவதும் புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய கல்வி கொள்கை தொடர்பாக, மாணவர்கள், பெற்றோர் மற்றும் பேராசிரியர்களிடம், நிபுணர் குழு  இன்று(செப்.,24) கருத்து கேட்கிறது. மத்திய அரசு நாடு முழுவதும்  புதிய தேசிய கல்வி கொள்கை தயாரித்து அமல்படுத்த உள்ளது. தமிழகத்தில், இதை அமல்படுத்துவது குறித்து, அரசியல் கட்சிகள் மற்றும் கல்வியாளர்களிடம், பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இந்நிலையில், பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்க, உயர் கல்வி மற்றும் பள்ளி கல்வி துறை சார்பில், தனித்தனியே நிபுணர் […]

education 3 Min Read
Default Image

காவல் நிலையங்கள் சூரையாடப்பட்ட பெங்களூர் கலவர விவகாரம்… என்.ஐ.ஏ விடம் ஒப்படைப்பு…

கர்நாடகா மாநில  காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வீட்டருகே, கடந்த ஆகஸ்ட் மாதம்  11ஆம் நா  வெடித்த கலவரம் தொடர்பான இரண்டு வழக்குகள் தற்போது  என்.ஐ.ஏ., வசம் ஒப்படைக்கப்பட்டது. கர்நாடகாவை சேர்ந்த, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்  அகண்ட ஸ்ரீனிவாசமூர்த்தி யின் உறவினர் நவீன் என்பவர், கடந்த ஆகஸ்ட் மாதம்  11ஆம் நாள்  தன் சமூக வலைதல பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டார். அது, மத ரீதியாக, ஒரு பிரிவினரை புண்படுத்தியதாக கூறப்பட்டது. இதைஅடுத்து,  அகண்ட ஸ்ரீனிவாசமூர்த்தியின் வீடு அமைந்துள்ள, […]

#NIA 4 Min Read
Default Image

வானில் உள்ள இலக்கை துள்ளியமாக தாக்கி அழிக்கும் அபியாஸ் ஏவுகனை சோதனை வெற்றி…

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) முற்றிலும் உள்நாட்டு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி ஏவுகணைகளை தயார் செய்து அவற்றை வெற்றிகரமாக சோதித்து வருகிறது. அவ்வகையில், வானில் உள்ள இலக்குகளை அதிவேகத்தில் சென்று தாக்கி அழிக்கக்கூடிய  அபியாஸ் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.  ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. ஏவு வாகனத்தில் இருந்து சீறிப்பாய்ந்த அபியாஸ் ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதற்காக […]

ABIYAS 3 Min Read
Default Image

ஹிந்தி தெரியாதா?… நோ லோன்… ஓய்வுபெற்ற மருத்துவரை அவமதித்த வங்கி மேலாளர்…

கடன் வாங்க வந்த மருத்துவருக்கு  ஹிந்தி தெரியாததால், கடன் தர மறுத்த வங்கி மேலாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அரியலுார் மாவட்டம்  யுத்தப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன், 77. இவர்  ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில், தலைமை டாக்டராக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். இவர், 15 ஆண்டுகளாக, தான் வாடிக்கையாளராக உள்ள கங்கைகொண்ட சோழபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடன் கேட்டு, சில நாட்களுக்கு முன் விண்ணப்பித்தார். வங்கியின் மூத்த மேலாளராக இருந்த, மஹாராஷ்டிராவைச் சேர்ந்த விஷால், ‘உங்களுக்கு […]

hindi 3 Min Read
Default Image

கொரோனா வார்டில் மின் தடை… மூச்சுத்தினறலால் 2 பேர் பலி…

திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் 20 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த வார்டில் உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால், செயற்கை சுவாசம் அளிப்பதற்காக ஆக்சிஜன் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே தற்போது திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் தீவிரமாக நடக்கிறது. இதற்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் பல்வேறு பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. இதுபோல் நேற்று கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டு அருகே கட்டிட பணிக்காக பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டும் […]

#Thiruppur 3 Min Read
Default Image

குளத்தில் நச்சு… 300க்கும் மேற்பட்ட யானைகள் பலி…

தென்ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில் உள்ள  ஒகவாங்கோ டெல்டா பகுதி தேசிய பூங்காவில் கடந்த மே மாதம் தொடங்கி ஜூலை வரையிலான காலகட்டத்தில் ஒன்றன்பின் ஒன்றாக 300-க்கும் மேற்பட்ட யானைகள் மர்மமான முறையில் இறந்துபோயின. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து யானைகளின் இறப்புக்கான காரணம் குறித்து அறிய விசாரணை முடுக்கி விடப்பட்டது.இந்த நிலையில் நச்சுத்தன்மை கலந்த நீரை அருந்தியதே யானைகள் இறப்புக்கு காரணம் என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி போட்ஸ்வானா வனவிலங்கு […]

#Death 3 Min Read
Default Image

நவீன வசதிகளுடன் தனது சேவையை துடங்கியது 108…

வென்டிலேட்டர்’ உள்ளிட்ட  அதிநவீன அவசர சிகிச்சை கருவி வசதிகளுடன் கூடிய அவசர ஊர்தி  வாகனங்கள், நேற்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டன. நோயாளிகளை அவசர முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்ற வசதியாக, நவீன வசதிகளுடன் கூடிய அவசரஊர்தி  வாகனங்களை, தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த வாகனத்தில் ‘வென்டிலேட்டர்’, ஆக்ஸிஜன் சிலிண்டர், இருதய இயக்கத்தை துாண்டும் நவீன கருவி, உயிர்காக்கும் மருந்துகளை தானியங்கி முறையில் வழங்கி உயிர்காக்கும் கருவி, கூடுதல் மருத்துவ வசதியுடன், ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில், […]

facility 3 Min Read
Default Image

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்…

கடந்த தேர்தலின்போது தாக்கல் செய்த பிரமாண பத்திரம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு, வருமான வரித்துறை, ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது. மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் கூறியதாவது:தேர்தலின்போது நான் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இடம் பெற்றிருந்த செலவினங்கள் குறித்து விளக்கம் கேட்டு, வருமான வரித்துறை எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. […]

income tax 3 Min Read
Default Image

#பாஜக பஞ்சத்திற்கு வழிகாட்டுகிறது- மசோதா குறித்து விளாசல்

கொரோனா பேரிடரை  கையாள தெரியாத மத்திய அரசு வேளாண்மை மசோதா மூலமாக நாட்டில் பஞ்சத்தினை ஏற்படுத்த முயலுவதாக  மேற்கு வங்க முதல்வர் மசோதா குறித்து விமர்சித்துள்ளார். மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வேளாண்மை மசோதாவிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மசோதா குறித்து பிரதமர் விளக்கமளித்தா.ஆனாலும் மசோதாவிற்கு விவசாயிகள்,அரசியல் கட்சிகள் என பலரும் எதிர்த்து வருகிறனர். இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மசோதா குறித்து கூறியதாவது: அத்தியவாசிய பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எந்த நடவடிக்கையும் […]

ISSUE 3 Min Read
Default Image

அவசர ஊர்தி வராததால் 14 வயது சிறுவன் 8 கி.மீ தூரம் தந்தையை தள்ளு வண்டியில் இழுத்து சென்ற அவலம்…

அவசர ஊர்தி வசதி இல்லாததால், உடல் நலமின்றி அவதிப்பட்டு வரும் தனது தந்தையை 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு தள்ளு வண்டியில் இழுத்தே  சென்ற மகனின் செயல் சமூக வலைதளங்களில் வைரலானது. கர்நாடகாவின் கோலார் மாவட்டம், சீனிவாஸ்பூர் தாலுகா, கே. பாதூரு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (55). இவர், காய்கறி, பழங்களை விற்று அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் கிருஷ்ணப்பாவுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. ஏற்கனவே தொடர்ந்து பெய்து […]

#Viral 4 Min Read
Default Image

பிவாண்டி 3 மாடி கட்டட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17ஆக உயர்வு… மீட்பு பணி தீவிரம்…

பிவாண்டி 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17ஆக உயர்வு. மஹாராஷ்டிரா மாநிலம் பிவாந்தியில் உள்ள ஜிலானி என்ற 3 அடுக்குமாடி குடியிருப்பு நேற்று (செப்டெம்பர் 21) அதிகாலை 3.20 மணியளவில் இடிந்து விழுந்தது. இந்த துயர  சம்பவம் அதிகாலை நடந்தது என்பதால் அதில் வசித்த குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்துள்ளனர். இதில் நேற்று 8 பேர் பலியாகி இருந்தனர். இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதால் மீட்புப்பணி தீவிரமாக நடந்து […]

#mumbai 3 Min Read
Default Image

உலகம் சிறப்பாக இருப்பதற்கு ஐ.நா அவையே காரணம்… பிரதமர் மோடி புகழாரம்…

ஐ.நா சபை அமைப்பு துவங்கி இந்த ஆண்டுடன் 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதற்காக இந்த ஆண்டு இன்று முதல் வரும் 29 ஆம் தேதி வரை ஐ.நா பொது சபையில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்த விவாத நிகழ்ச்சியில் உறுப்பு நாடுகளின் பல்வேறு தலைவர்கள் கரோனா பாதுகாப்பு காரணமாக  காணொலி வாயிலாக உரை நிகழ்த்தி வருகின்றனர். அந்த வகையில்,  ஐநா சபையின் 75 ஆவது ஆண்டு விழாவில் இன்று பல்வேறு நாடுகளை சேர்ந்த அதிபர்களும், பிரதமர்களும் காணெளி  […]

#Modi 3 Min Read
Default Image

கனமழை எதிரொலி… தத்தளிக்கும் கர்நாடகா… மீட்பு பணிகள் முடுக்குவிப்பு…

நம் அண்டை மாநிலமான கர்நாடகாவில் தற்போது கொட்டித் தீர்க்கும் கனமழையால் மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பிவழிகின்றன. இதையடுத்து அணைகள் திறப்பால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் 31 மீட்பு முகாம் அமைத்து மீட்பு. அம்மாநிலத்தின் முக்கிய ஆறுகளான காவேரி, ஹேமாவதி, கபிலா, ஹாரங்கி போன்ற ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் செல்வதால், அவற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.  கிருஷ்ண ராஜ சாகர் அணையிலிருந்து 40,000 […]

#Flood 3 Min Read
Default Image

தனித்தேர்வர்களுக்கான தேர்வுகள் இன்று தொடங்கியது…

10 மற்றும் 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் இன்று தொடங்குகிறது. 10 மற்றும் 12ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வில் தோல்வியடைந்த  பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தனித் தேர்வுகள் மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கான தனித்தேர்வுகள் இன்று முதல் நடைபெற உள்ளன. 200க்கும் அதிகமான மையங்களில் நடைபெறும் இந்த தேர்வுகளில், சமூக இடைவெளியை பின்பற்றி தேர்வுகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 10 ஆம் வகுப்புக்கு செப்டம்பர்-26 வரையும், 12 ஆம் வகுப்புக்கு செப்டம்பர் 28 […]

#Exam 2 Min Read
Default Image

வண்ண எச்சரிக்கைகள் அறிவிப்பு…கேரளாவில் கனமழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் நம் அண்டை மாநிலமான கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கேரளாவின் காசர்கோடு, கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், இடுக்கி ஆகிய 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும்,   எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கொல்லம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும், திருவனந்தபுரத்திற்கு மஞ்சள் அலர்ட்  எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்களை […]

#Kerala 2 Min Read
Default Image