கேரள கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக தடை செய்யப்பட்ட பகுதியில் ஊர்வலம் நடத்திய மலையாள நடிகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் குருவிலங்காட்டில் உள்ள கன்னியாஸ்திரிகள் மடத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் கூறிய பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து ஜலந்தரில் பிஷப்பாக பணியாற்றி வந்த பிராங்கோ முல்லக்கல் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் கோழிக்கோட்டில் கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக நடந்த ஊர்வலத்தில் மலையாள நடிகர் ஜாய்மேத்யூ என்பவர் பங்கேற்றார். அவர்கள் ஊர்வலம் அந்த பகுதியில் உள்ள மிட்டாய் தெரு வழியாக சென்றது. […]