கடந்த 8 மாதங்களாக ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டிய வண்ணம் இருந்த நிலையில், ஜூன் மாதம் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்குக் கீழ் குறைந்துள்ளது. மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலித்து வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வருவாய் 92,849 கோடி ரூபாய் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில், ஜூன் 5-ந்தேதி முதல் ஜூலை 5-ந்தேதி வரையிலான உள்நாட்டு […]