ராகவா லாரன்ஸ், 3385 தூய்மை பணியாளர்களுக்கு 25 லட்சத்தை நிதியுதவியாக வழங்கி உதவியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகமாக நிதியுதவி வழங்கியவர் ராகவா லாரன்ஸ் என்பது அனைவரும் அறிந்ததே. இதுவரை 4 கோடிக்கு மேல் நிதியுதவி வழங்கியுள்ளார். இவர் ஏற்கனவே தான் நடிக்கும் அடுத்த படத்தின் தயாரிப்பாளரான கதிரேசனிடம் தனக்கு தர வேண்டிய சம்பளத்தில் ரூ. 25 லட்சத்தை தூய்மை பணியாளர்களுக்கு வழங்குமாறும், அதனை நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கோரியும் கேட்டதாக அறிவித்திருந்தார். […]