தெலுங்கானா மாநிலமான ஐதராபாதைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் ஐ.சி.எம்.ஆர் எனப்படுகின்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தேசிய வைராலஜி மையம் ஆகியவைகள் இணைந்து, இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியான, ‘கோவாக்சின்(covaxin)’ தடுப்பூசி மருந்தை தயாரித்து உள்ளன. இந்த தடுப்பூசியி மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்வதற்கு, டி.சி.ஜி.ஐ., எனப்படுகின்ற இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் அனுமதி அளித்து உள்ளது. உலக விஞ்ஞானிகள் எல்லாம் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார்கள்; மேலும் தீர்வை நோக்கிய பயணம் மிக கடுமையாக […]