பிரபல வழக்கறிஞர் காமராஜர் கொலை வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க உத்தரவு. சென்னையைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் காமராஜர் கொலை வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் அமைச்சர் தலித் ஏழுமலையின் மருமகனான வழக்கறிஞர் காமராஜ் கடந்த 2014 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.