அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ,முன்னாள்வீட்டுவசதித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்எல்ஏ பரந்தாமன் கோரிக்கை வைத்துள்ளார். புளியந்தோப்பு கேபி பூங்கா குடியிருப்பு தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.இது தொடர்பாக,எழும்பூர் திமுக சட்டப் பேரவை உறுப்பினர் பரந்தாமன் தனது உரையில், “புளியந்தோப்பு குடிசைமாற்று வாரியம் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள் என்பது ஊடகங்களில் செய்தியாக வெளியாகி இருக்கிறது. எனவே,இதனை கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.இந்த கட்டடம் 2018ல் […]